மொனராகலையில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்து பல இலட்சம் ரூபா பணத்தை திருடிய நபர், சிசிடிவி கமெராவில் சிக்கியுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரையும் மேலும் நான்கு சந்தேக நபர்களையும் மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.