வர்த்தக நிலையமொன்றை உடைத்து 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களை கைது செய்யும் போது, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கடைக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொனராகலை மற்றும் திஸ்ஸமஹாராமய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.