ஹீனட்டியங்கல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் களுத்துறையில் இருந்து ஹீனட்டியங்கல நோக்கி பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹீனட்டியங்கல பாலத்திற்கு அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.