குருணாகல் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் – சுமங்கல மாவத்தையை சேர்ந்த குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனைக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்துள்ளார்.
இந்நிலையில் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அவர் தனது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பிளேட் கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளார்.
காயமடைந்த நபர் 13 குற்றங்களுக்கான சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.