Thursday, April 16, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண் வைத்தியரை வன்புணர்ந்த சக வைத்தியர் கைது

பெண் வைத்தியரை வன்புணர்ந்த சக வைத்தியர் கைது

மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரை சக வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles