Tuesday, April 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்களிடம் சில்மிஷம் செய்த 18 பேர் கைது

பெண்களிடம் சில்மிஷம் செய்த 18 பேர் கைது

பொதுப் போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் நேற்று (07) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இது தொடர்பான 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் பாலியல் தொல்லை செய்த 18 பேரும், திருடர்கள் 24 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்காக, பொதுப் போக்குவரத்து சேவைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நேரமான காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையிலும் அதிக முன்னுரிமை அளித்து, சிவில் உடை அணிந்த பல பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles