Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

சுங்கவரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

விசேட அதிரடிப்படை கோனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், கைப்பேசி பாகங்கள், கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு 12, அப்துல் ஹமீட் மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles