கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்று நேற்று (07) மாலை தீக்கிரையானது.
இதனால் அங்கிருந்த தென்னை நார் உட்பட பல உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கராச்சி உள்ளூர் சபையின் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சுமார் 35 இலட்சம் மதிப்பிலான உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.