Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணவரின் கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த மனைவி

கணவரின் கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த மனைவி

பாணந்துறை பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியின் தலையில் மன்னா கத்தியால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (07) இரவு 9.30 மணியளவில் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்கெலே வீதி, தொம்பகஹவத்த பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அறைக்குள் தொலைபேசியில் அழைப்பில் இருந்த குறித்த பெண், கணவன் வருவதைக் கண்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கணவன், சமையலறையிலிருந்த கத்தியை கொண்டு வந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

ரத்தம் கொட்டிய படி அயலவர் வீட்டுக்கு ஓடிச்சென்ற பெண் அவர்களிடம் உதவி கோரியுள்ளார்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இந்த பெண்ணை பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், பாணந்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் பிரகாரம்இ தாக்குதலை மேற்கொண்ட 56 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles