Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெலியத்த ஐவர் கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

பெலியத்த ஐவர் கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று (6) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெலியயத்த பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவருடன் சென்று சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அக்குரெஸ்ஸ – இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கம்புருபிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மறைத்து வைத்து பின்னர் கம்புருபிட்டியவில் இருந்து காலி கராப்பிட்டியவுக்கு துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அவர் உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (7) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles