குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக பண்டிகைக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், இவ்வருட நிவாரணத்தின் மூலம் 24 இலட்சம் பேருக்கு நன்மைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.