குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (05) முதல் நாடளாவிய ரீதியில் குறைந்த எடை கொண்ட ரொட்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது குறித்த வர்த்தகர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாணின் எடை குறிப்பிடும் வர்த்தமானியை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டது.