விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவலோகிதேஸ்வர போதிசத்வ என்றழைக்கப்பட்ட மஹிந்த கொடிதுவக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (07) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு திங்கட்கிழமையும் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் நடைபெறும் மனநல மருத்துவமனைக்கு ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.