யால தேசிய வனத்தில் பாரியளவில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய,மொனராகலை பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று யால தேசிய பூங்காவின் சியம்பலாண்டுவ கும்புக்கன் ஓயா பகுதியில் இந்த சோதனையை மேற்கொண்டது.
இந்தச் சோதனையின்போது 16,800 கஞ்சா செடிகள், 1,658 கிலோ உலர் கஞ்சா மற்றும் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கஞ்சா செடிகள் மற்றும் உலர் கஞ்சா கையிருப்புகள் பொலிஸாரினால் எரியூட்டப்பட்டுள்ளதுடன், மொனராகலை பிரிவின் இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.