Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண் கொலை: சந்தேகநபர் உயிரை மாய்த்துக் கொண்டார்

பெண் கொலை: சந்தேகநபர் உயிரை மாய்த்துக் கொண்டார்

சூரியவெவ, பத்தேவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (05) கொலை செய்யப்பட்டார்.

இவர் தனது வீட்டில் இருந்த போது சந்தேக நபர் அவரது வீட்டிற்கு வந்து இந்த கொலையை செய்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் நீண்டகாலமாக தொடர்பு இருந்து வந்துள்ள நிலையிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் முச்சக்கரவண்டி சாரதி எனவும், கொலை இடம்பெற்ற போது அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பெண்ணைக் கொன்றதை அடுத்து, பொலிஸாருக்கு தொலைபேசியில் தகவலை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை பல்லேகஸ்வெவ பிரதேசத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles