Tuesday, June 16, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவர் கொலை

பெண்ணொருவர் கொலை

சூரியவெவ – பொல்பஹ பிரதேசத்தில் வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட பெண் சூரியவெவ – பத்தேவெவ மேற்கு பகுதியைச் சேர்ந்தவராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles