மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
அதன்படி, நேற்று (05) முதல் அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக அரச மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும, அவர் மன்னர் அரச விவகாரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழக்கம் போல் மேற்கொள்வார்.