இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது. பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படகும், அதிலிருந்து சுமார் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளும் மீட்கப்பட்டது.
பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

