திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மோதல் சம்பவம் நேற்று (05) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அங்கு காயமடைந்த திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த உவைஸ் முகம்மது உபேய் என்ற கைதியே திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால்,வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.