Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு500 கோடி ரூபா மோசடி செய்த நபரின் விளக்கமறியல் நீடிப்பு

500 கோடி ரூபா மோசடி செய்த நபரின் விளக்கமறியல் நீடிப்பு

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் ட்ரெட்வின் என்ற நிதி நிறுவனத்தை நடத்திச் சென்று வைப்பாளர்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தரிது இரோஷ் வீரசேகர என்ற நபர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று (05) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருடன் கைது செய்யப்பட்ட அவரது தோழி என கூறப்படும் தொலைக்காட்சி நாடக நடிகையை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​அவரது நிதி மோசடியில் சிக்கிய வைப்பாளர்கள் குழு கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles