புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
படுகாயமடைந்த நபர்கள் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் 67 வயதுடைய கற்பிட்டி மண்டலக்குடாப் பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.