Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட அறுவர் காப்பாற்றப்பட்டனர்

பாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட அறுவர் காப்பாற்றப்பட்டனர்

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்று, அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 பேர், ​​பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட 3 இளைஞர்களும், 3 யுவதிகளும் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களை காப்பாற்றிய உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களுக்கு முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles