கம்பளை, எத்காலல பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து இன்று (05) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எத்கால பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.