Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது‌செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிபான துன்ஹிடபதன காட்டு பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து தேடுதல் மேற்கொண்டது.

இதன்போது காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 780,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 6 பரல்கள் டங்கர ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பதுளை தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles