உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும், பங்காளியாகவும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.