Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெலியத்த துப்பாக்கிச்சூடு: பிரதான துப்பாக்கிதாரி டுபாய்க்கு தப்பியோட்டம்

பெலியத்த துப்பாக்கிச்சூடு: பிரதான துப்பாக்கிதாரி டுபாய்க்கு தப்பியோட்டம்

பெலியஅத்த பிரதேசத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிதாரியின் தந்தையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி மற்றும் ஏனைய இரு துப்பாக்கித்தாரிகளும் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல டுபாய்யில் உள்ள முகவர் மூலம் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டுபாய்க்கு தப்பிச் சென்ற பிரதான துப்பாக்கிததாரி, கடற்படையில் சில காலம் பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வரும் கடற்படை வீரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles