Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதந்திர தினத்தை முன்னிட்டு திங்களன்று (05) விடுமுறை இல்லை

சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்களன்று (05) விடுமுறை இல்லை

76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இவ்வருட சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும், திங்கட்கிழமையன்று அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் நாம் மேற்கொண்ட விசாரணையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (05) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படும் என வெளியான செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles