Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என நம்ப முடியாது என அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு இம்மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles