எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் பாடசாலை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டணங்களை 10 சதவீதம் மற்றும் 15 சதவீதமாக அதிகரிக்க சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த கட்டணங்கள் குறுகிய தூரத்திற்கு பத்து சதவீதமும், நீண்ட தூரத்திற்கு பதினைந்து சதவீதமும் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.