மொனராகலை, தொம்பகஹவெல பிரதேசத்தில் ஊஞ்சல் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் ஒன்று வீழ்ந்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது பெற்றோருடன் உறவினர் வீட்டின் விழாவொன்றில் பங்கேற்க சென்றிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த வீட்டில் இரண்டு கொங்கிரீட் தூண்களுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது, கொங்கிரீட் தூண் ஒன்று திடீரென சிறுவன் மீது சரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.