Sunday, May 25, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைக்குள் இருந்த இளைஞன் மர்ம மரணம்

சிறைக்குள் இருந்த இளைஞன் மர்ம மரணம்

அனுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று (31) சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞன் பொலிஸ் அறையில் திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் இரண்டாம் படியில் வசிக்கும் 22 வயதுடைய குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளையான ஷனுக கிஹான் மரம்பகே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும்இ உயிரிழந்த இளைஞன் பாட்டி மற்றும் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பொலிஸ் காவலுக்கு பிறகு ஏதோ நடந்திருப்பதாகவும் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த இளைஞனையும் அவரது மூன்று நண்பர்களையும் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர்களது உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது, ​​இளைஞர்களுக்கு தேவையான உணவு வழங்ககி வீடு திருப்பியுள்ளனர். பின்னர் இளைஞன் திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

குறித்த அறிவிப்பின் பிரகாரம் அங்கு சென்ற உறவினர்கள் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை காணமுடிந்தது.

இது குறித்து பொலிஸாரிடம் வினவிய போது, ​​போதைப்பொருள் பாவனையின்மையால் ஏற்பட்ட சிக்கலால் அவர் சிறைக்குள் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles