Friday, October 31, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கையின் போது பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் கைது

யுக்திய நடவடிக்கையின் போது பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் கைது

இருவரைக் கொல்வதற்காக காரில் டி-56 துப்பாக்கியை எடுத்துச் சென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு ஊழல் தடுப்புச் சுற்றிவளைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்கொட வீரப்பன் மற்றும் பாஜா என்ற 46 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையின் போது,அங்குருவாத்தோட்டை நோக்கி பயணித்த காரை நிறுத்தி பரிசோதித்ததில், அதிலிருந்து 28 தோட்டாக்கள், T56 துப்பாக்கி, 2 வாள்கள், 2 கைக்குண்டுகள் மற்றும் 11 கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்னர்.

மேலும், பிரதான சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் சோதனையின் போது மேலும் 5 வாள்கள், துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

T56 துப்பாக்கியின் அனைத்து இலக்கங்களும் ஏதோவொரு சாதனத்தைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அரசாங்க ஆய்வாளருக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles