இலங்கையில் 4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குழந்தை வளர்ச்சிக்கு முந்திய கட்டம் மிகவும் முக்கியமானது எனவும் உலகில் அதற்கு அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.