Monday, May 20, 2024
25 C
Colombo
செய்திகள்உலகம்மோனா லிசா மீது சூப்பை ஊற்றிய இரு பெண்கள்

மோனா லிசா மீது சூப்பை ஊற்றிய இரு பெண்கள்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் பிரான்ஸின் தலைநகர் – பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பாதுகாப்பாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தினால் ஓவியத்துக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ‘ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு’ உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டுவிட்டது என்றும் குறித்த பெண்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடந்த உடனடியாக அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடியுள்ளனர்.

இவ்வோவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles