Thursday, October 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபகிடிவதை சம்பவம்: கைதான மாணவர்களுக்கு பிணை

பகிடிவதை சம்பவம்: கைதான மாணவர்களுக்கு பிணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (29) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களும் ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles