Friday, June 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இலந்தடிய பிரதேசத்தில் இன்று (25) காரில் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள குத்தகை நிறுவனமொன்றில் கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்

ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் காரின் சாரதி ஆசனத்திலும் மற்றைய முன் இருக்கைகளிலும் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டது.

அவரது காரில் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபா மதிப்பிலான 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles