Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம – வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விசேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் ஆகிய இருவருமே இந்த விபத்தில் உயிரந்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ வீரர், மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles