உலகின் செல்வந்த அரசியல்வாதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடம்பிடித்துள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி அவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
அந்த சொத்துக்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வீடும், 716 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள விமானமும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.