Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமறைந்த சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை

மறைந்த சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (26) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles