Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுTIN இலக்கத்தை வழங்க புதிய நடைமுறை

TIN இலக்கத்தை வழங்க புதிய நடைமுறை

வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை(Taxpayer Identification Number), பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று அவர்களைப் பதிவு செய்த பின்னர், பதிவு இலக்கத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியான சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். Online ஊடாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மிகவும் இலகுவான நடைமுறையொன்றை தயாரிப்பதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles