3 மீனவர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதுடன், சந்தேக நபரான பெண்ணொருவர் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் இலங்கை கடற்பரப்பில் மீனவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்களை ஏற்றிக் கொண்ட தேஜான் படகை கடத்தி, அதிலிருந்த 3 பேரை கொலை செய்து, ஏனையவர்களை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கு நடைபெற்ற காலப்பகுதியில் சந்தேக நபர்களில் மூவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், ஏனைய 8 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.