Monday, May 20, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பொருளாதார பார்வையுடன் ஜனாதிபதி செயற்படுகிறார்!

புதிய பொருளாதார பார்வையுடன் ஜனாதிபதி செயற்படுகிறார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நிதி, சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார பார்வையுடன் ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற ” 2024 வரவு செலவுத்திட்டம்” கருத்தரங்கில் சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஜனாதிபதியின் தொழிற்சங்க இணைப்புப் பிரிவு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையை வலுசக்தி ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Keep exploring...

Related Articles