Monday, August 25, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளது.

இதன்படி குறைந்தபட்ச வேதனத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார சுமித்ரஆரச்சி தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles