Friday, October 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனநாயக போராளிகள் கட்சி உப த​லைவர் பிணையில் விடுவிப்பு

ஜனநாயக போராளிகள் கட்சி உப த​லைவர் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உப தலைவர் நகுலேஸ் 60 நாட்களுக்கு பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் .

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி உப தலைவர் என்.நகுலேஸ் நேற்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி காரியாலயத்தில் மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு மேற்கொண்ட நிலையில் பொலிசாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விளக்கமறியலில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவரை 60 நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles