அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு மனநல சிகிச்சை தேவை என சட்ட வைத்திய நிபுணர் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இதன்படி, சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை மனநல சிகிச்சைக்காக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.