Thursday, April 24, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்திடமிருந்து பகுதிநேர வேலைவாய்ப்புகள்

அரசாங்கத்திடமிருந்து பகுதிநேர வேலைவாய்ப்புகள்

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, முச்சக்கரவண்டித் தொழிலாளர்கள் குழுவொன்று இதன் மூலம் பயனடைவதுடன், இதன் முன்னோடித் திட்டமாக ஹம்பாந்தோட்டையை இலக்காகக் கொண்டு 70 முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இதனூடாக சாரதிகளின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நீர் குழாய் பராமரிப்பு, மின் பொறியியல், தச்சு, முடி வெட்டுதல் மற்றும் கட்டிட ஓவியம் போன்ற தெரிவு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதனூடாக மேலதிக வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles