50,000 வீட்டு உரிமங்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு நகர திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகளில் இருந்து மாதாந்தம் 3,000 ரூபா அறவிடப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த வாடகைப் பணம் அறவிடப்படுவதை முற்றாக நிறுத்துவதற்காக இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.