பாதாள உலக குழு தலைவரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டிய ஹல்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சிறையில் உள்ள உறவினருக்கு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையை வழங்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.