புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றை பதிவு செய்யாமல் பாவிக்கின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எச்சரித்துள்ளது.
வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில், நாளாந்தம் 100 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.