Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு இளைஞர் காயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு இளைஞர் காயம்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் ஒஹியா புகையிரத நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் 29 வயதான மொஹமட் நசாப் நிமா என்ற ஈரான் பிரஜை ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வெளிநாட்டவர் அதே ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 1990 அம்புலன்ஸ் மூலம் தியத்தலாவை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாலை 4:35 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் காரணமாக அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles